districts

img

மூலப்பொருள் விலையை கட்டுப்படுத்துக சென்னை அச்சக தொழில் புரிவோர் கோரிக்கை

சென்னை, நவ. 24 - காகிதம், மை, கெமிக்கல் உள்ளிட்ட மூலப் பொருட்களின் கடுமையான விலை யேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அச்சக தொழில்புரிவோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அச்சக தொழில் புரிவோர் சங்கத்தின் 4ஆம் ஆண்டு பேரவை ஞாயிறன்று (நவ.24)  சேப்பாக்கத்தில் நடை பெற்றது. இந்த பேரவையில், அச்சக தொழி லுக்கான மூலப் பொருட்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும், அச்சக தொழில் புரிவோருக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சங்கத்தின் தலைவர் தி.வீரசிங்கம் தலை மையில் நடைபெற்ற இந்த பேரவையில் தமிழ் கம்ப்யூட்டர் ஆசிரியர் க.ஜெய கிருஷ்ணன், அந்தனர் குரல் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன், உரிமம் வழங்கும் ஆய்வாளர் எம்.ரவி, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.சையத் அலிகோயா, பொருளாளர் ஏ.ஜோசப் செல்வம், துணை த்தலைவர் டி.ஏ.ஜான்சன், துணைச் செயலாளர் கே.மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் தலைவராக தி.வீரசிங்கம், செயலாளராக எம்.சையத் அலி கோயா, பொருளாளராக ஏ.ஜோசப் செல்வம் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.