districts

img

கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு துவங்கியது

கடலூர், ஜூன் 7- கடலூரில் சார் பதிவு அலுவலகம் 50 சத வீத முன்அனுமதி டோக்கன் வழங்கப்பட்டு செயல்படுகிறது. தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் திங்கட்கிழமை (ஜூன் 7) முதல் சில தளர்வு களுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகைக் கடை இரண்டு சக்கர  வாகனம் பழுது பார்க்கும் கடை அரசு அலு வலகங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அரசு அனுமதி அளித்தது. சார் பதிவு அலுவலகத்தில் 50 சதவீத அள விற்கு மட்டுமே பத்திரப்பதிவு செய்ய வேண்  டும் என்று அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள், பொதுமக்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்ட பின்தான் உள்ளே வர அனுமதிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட அரசு வழிகாட்டுதலின்படி சார்  பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்  கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடலூரில் ஒரு சார்பதி வாளர் அலுவலகத்திற்கு 50 டோக்கன் மட்டும்  விநியோகிக்கப்பட்டது. அவர்களுக்கு மட்டுமே பத்திர பதிவு செய்து கொள்ளலாம்.

;