districts

img

சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் சேப்பாக்கத்தில் ஏப்.8 மோதல்

சென்னை, ஏப். 4- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரு கிறது. ஏப்.8 அன்று  நடைபெறும் மூன்றாவது போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்து சென்னை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "திங்கட்கிழமை (ஏப்.8) நடை பெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் ஆன்லைன் டிக்கெட் விற்பனையானது வெள்ளியன்று (ஏப்.5) காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும்" என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி www.insider.in என்ற இணையதளத்தை மட்டுமே பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம் என கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது போட்டிக்கான டிக்கெட் விலை விவரங்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.1700 முதல் அதிகபட்சமாக 6000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சிதம்பரம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் சென்னை அணி தொடர்ச்சி யாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முத லிடத்திலிருந்தது அடுத்து டெல்லி அணி யுடன் போட்டியில் தோல்வி தழுவியதால் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.  திங்களன்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கொல்கத்தா அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.