districts

img

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விவாதிக்க சட்டமன்ற சிறப்பு அமர்வு மாதர் சங்க மத்திய சென்னை மாநாடு கோரிக்கை

சென்னை, ஆக. 6 - பெண்களுக்கு எதிரான குற்றங்களை விவாதிக்க சட்டமன்ற சிறப்பு அமர்வை நடத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட முதல் மாநாடு சனிக்கிழமையன்று (ஆக.6) அயனாவரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், விதவை, முதி யோர் உதவித் தொகை வழங்க விதிக்கப்படும் பொருத்தமற்ற நிபந்தனை களை நீக்க வேண்டும், மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், நுண்நிதி நிறு வனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பய னாளிகளிடம் வசூலிக்கப் படும் பங்களிப்பு கட்ட ணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.சாந்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஏ.விமலா வரவேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.மகேஷ்வரி சங்க கொடியை ஏற்றினார். துணைச் செயலாளர் ஏ.நாக ராணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செய லாளர் ஏ.ராதிகா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் வி.தனலட்சுமி வேலை அறிக்கை, வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாநில துணைத்தலைவர் எஸ்.டி.சங்கரி வாழ்த்துரை வழங்கினார். மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி நிறைவுரையாற்றினார்.  மாவட்டத் தலைவராக ஏ.சாந்தி, செயலாளராக வி.தனலட்சுமி, பொரு ளாளராக எம்.சலோமி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர்.

;