districts

img

ராஜீவ்காந்தி நகர் மக்களுக்கு பட்டா அமைச்சர்களிடம் சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, ஏப். 24 - தாம்பரம் ராஜீவ்காந்தி நகரில் வசிக்கும் மக்க ளுக்கு குடிமனை பட்டா வழங்க அமைச்சர்களை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். தாம்பரம் மாநகராட்சி, புலிக்கொரடு கிரா மத்தில் ராஜீவ்காந்திநகர் அமைந்துள்ளது.சர்வேஎண்.113ல் 2.33 ஏக்கர் நிலத்தில் 4 தலை முறைகளாக 102 குடும்பங்  களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். ஆதிதிராவிடர், பழங்குடி யினர் இனத்தை சேர்ந்த இவர்களை வருவாய்த்துறை அப்பகுதி யிலிருந்து அகற்ற முயற்சிக் கும் போதெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சியினர் தடுத்து வருகின்றனர். இந்நிலையில் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பி னர் பி.டில்லிபாபு, இவர்க ளுக்கு பட்டா கேட்டு 2006 ஆம் ஆண்டு முதல் வருவாய்த்துறை, வனத்துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். இதனையொட்டி, வன நிலத்திற்கு ஈடாக இருமடங்கு அளவு உள்ள நிலத்தை வருவாய்த்துறை தந்தால் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு காப்புக்காடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் கூறினார். இதனையடுத்து ஆட்சி யரிடம் சிபிஎம் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகு செங்கல்பட்டு அருகே வேதநாராயணபுரம் கிராமத்தில் உள்ள தேவர் மலைப் பகுதியில் 4.66 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை 2015ஆம் ஆண்டு வனத்துறைக்கு வரு வாய்த்துறை வகை மாற்றம் செய்து கொடுத்தது.  

அதைத்தொடர்ந்து, தாம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப் பட்ட குழு, புலிக்கொரடு கிராமத்தை நில அளவை செய்து, 102 குடும்பங்களின் ஆவணங்களையும் பெற்று ஆய்வு செய்து  ஆட்சி யருக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில் வனத்துறை தனது நிலத்தை வருவாய்த்துறையிடம் ஒப்படைக்காமல் உள்ளது. இதனால் பட்டா வழங்கும் பணி தடைபட்டு நிற்கிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகைமாலி, எம்.சின்னதுரை எம்எல்ஏ, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன் மற்றும் ராஜன்மணி, தமீம்பாஷா உள்ளிட்டோர் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், வரு வாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன் ஆகியோரை சந்தித்து மனு அளித்து பேசினர். துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி 102 குடும்பங்க ளுக்கும் விரைவில்  பட்டா வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்  படும் என்று அமைச்சர்கள் உறுதி அளித்ததாக சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தெரிவித்தார்.

;