திருவள்ளூர், செப்.23- திருக்கண்டலம் அண்ணா நகரில் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப் பட்டு தற்கொலை செய்து கொண்ட வேலு குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.25 லட்சம் மற்றும் அவர் மனை விக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.சாமுவேல்ராஜ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். ஊத்துக்கோட்டை வட்டம், திருக்கண்டலம் ஊராட்சி அண்ணா நகரில் வசித்த இருளர் இனத்தை சேர்ந்த வேலு (வயது 31), என்பவர் அருகில் உள்ள ஆரிக்கம்பேடு கிராமத்தை சேர்ந்த அறிவழகனிடம் கந்துவட்டி முன் பணம் ரூ.20 ஆயிரம் பெற்றுள்ளார். ஒப்புக்கொண்டபடி முன் பணத்தை திரும்ப செலுத்திய பிறகும் வட்டி கேட்டு வேலுவின் வீட்டிற்கு சென்று அராஜ கமாக நடந்துள்ளனர்.இந்த சூழலில் மன உளைச்சலுக்கு ஆளான வேலு செப்- 2 அன்று விஷம் அருந்தி வேலு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திங்க ளன்று (செப் 23), வேலு குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் டோல்கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.சாமுவேல்ராஜ் பேசுகையில், நாடு முழுவதும் 360 நுண் நிதி நிறுவனங்கள் செயல்படுகிறது. இதில் டாடா போன்ற பெரிய நிறுவனங்களும் அடங்கும். பெரிய அளவில் கொள்ளையடிக்க முடியும் என்பதால் வட்டி தொழிலை நடத்துகின்றன. இந்த கடன் வலையில் சாதாரண மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். அரசு வங்கியில் 4 முதல் 6 விழுக்காட்டிற்கு பணத்தைப் பெற்று, அதனை சாதா ரண மக்களிடம் 26 விழுக்காடு வரை வசூல் செய்கின்றனர். இதனை அரசாங்கத்தின் ஆதரவுடன் இது போன்ற கொள்ளைகள் நடைபெற்று வருவது மிகப் பெரிய கொடுமையா கும். இப்படி தான் வேலு குடும்பமும் கந்து வட்டி கும்பலிடம் சிக்கிக் கொண்டுள்ளது.
வேலு குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வையும் அரசு செய்து கொடுக்க வேண்டும். அரசு ஏன் நிவாரணம் வழங்க வேண்டும் என்றால், சட்டங்கள் அதற்கு ஏராளமான விளக்கங்களை தெரிவிக்கிறது. சாதி நீடிப்பதற்கும், சாதிய கொடுமைகள் நீடிப்பதற்கும் அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற முறையில் இந்த நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்திலேயே இருளர் இனத்தை சேர்ந்த குடும்பங்கள் திடீரென சொந்த ஊரை விட்டு காணாமல் போவது எவ்வளவு பெரிய கொடுமையாகும். மானத்தை காப்பாற்றிக்கொள்ள கந்து வட்டியில் இருந்து தப்பிக்க தலைமறைவாக போகும் விதத்தில் மோசமான நிலைக்கு பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. எழுத்தறிவு இல்லாததும் இதற்கு ஒரு காரண மாக உள்ளது. இந்த நிலையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இதனை ஒரு அரசியல் கடமையாக கருதி மக்கள் சேவையாற்றி வருகிறோம் என்றார். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், வட்டச் செயலா ளர் ஏ.ஜி.கண்ணன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.ரவி, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இ.கங்காதுரை, மாநில துணைச் செயலாளர் ஏ.வி.சண்முகம், மாவட்ட தலைவர் ஜி.சின்னதுரை, மாவட்ட நிர்வாகிகள் அற்புதம், செஞ்சியம்மாள், தமிழரசி, தேவி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன் உட்பட பலர் பேசினர். பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலுவின் மனைவி தங்கம் தனது குழந்தைகள் பவானி (வயது 5), திவ்யதர்ஷினி (வயது 3), வினோதினி (வயது 1) ஆகிய மூன்று பெண் குழந்தைகளுடன் கலந்து கொண்டார்.