districts

img

பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்குக கிராம சபைக் கூட்டத்தில் சிபிஎம் தீர்மானம்

மேல்மருவத்தூர், ஜன. 27- ஆதிதிராவிட மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொறையூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.  செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், பொறையூர் ஊராட்சியில் நடை பெற்ற 76வது குடியரசு தின விழா சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும், புதிதாக கட்டப்பட்டஅங்கன்வாடி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும், வீராணம் சாலையில் மின்விளக்கு அமைக்க வேண்டும். பொறையூர் ஊராட்சிக்கு சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும், இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம், நூலகம், பள்ளி அருகாமையில் வேகத்தடை அமைக்கவேண்டும்,  பொறையூர் ஊராட்சி யில் மகளிர் கழிவறை கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சிபிஎம் கிளை செயலாளர் பிரேம்குமார்   தீர்மானமாக கொண்டு வந்தார்.