districts

img

மதுராந்தகத்தில் சிபிஎம் பொதுக்கூட்டம்

காஞ்சிபுரம் மக்களவை தனி தொகுதியில்  போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வத்தை ஆதரித்து சிபிஎம் மதுராந்தகம் வட்டக் குழு சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் மதுராந்தகம் தேரடி வீதியில் நடைபெற்றது.  கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.மாசிலாமணி தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் மலர் விழிக்குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, முன்னாள் மாவட்டச் செயலாளர் டி. கிருஷ்ணராஜ் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் எம்.எஸ்.அர்ஜுன் குமார், வட்டக் குழு உறுப்பினர் நடராஜ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் பேசினார்.