districts

img

உத்திரமேரூர் நெடுஞ்சாலை பணியில் மோசடி: வந்தவாசியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஏப். 28- திருவண்ணாமலை மாவட் டம், மங்கலம்-மாமண்டூர், கீழ்கொடுங்காலூர் கூட்டு சாலையிலிருந்து துவங்கும் உத்திரமேரூர் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணியில் மோசடி நடந்துள்ளது. இது குறித்து பலமுறை முறையிட்டும் அலட்சியப் போக்கை கடை பிடிக்கும் நெடுஞ்சாலை துறை யினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வந்தவாசி நெடுஞ்சாலை துறை அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேட்டு தலைமை தாங்கி னார். வட்டார செயலாளர் அப்துல் காதர்,  வட்டக்குழு உறுப்பினர்கள் பெ.அரிதாசு, கி.பால்ராஜ், கிளைச் செயலாளர் கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், தேவராஜ், முரு கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாமண்டூர், கீழ்கொடுங்கா லூர் கூட்டு சாலை பகுதியில் உத்திரமேரூர் சாலை துவங்கும் இடத்தில் உரிய அளவில் சாலையை அகலப்படுத்த வேண்டும். மிகவும் மோசமாக கோனல் மாணலாக கட்டப்படும் மழைநீர் வடிகால்வாயை அகற்றி முறையாக அமைக்க வேண்டும், ஆமை வேகத்தில் நகரும் கால்வாய் கட்டும் பணியை விரைவு படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.