மக்களவைத் தேர்தலில் வட சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து ராயபுரம் 53ஆவது வட்டத்தில் 3 மையங்களில் வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, நிர்வாகிகள் டி.வெங்கட், ச.முருகேசன், பி.ஜெயவேல், ஆ.ராஜா, ஆட்டோ சங்க தலைவர் ச.குட்டி, அமைப்புசாரா நிர்வாகிகள் குணசேகரன், குமார், வள்ளலார் வியாபாரிகள் சங்க செயலாளர் எம்.தமீம் சேட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.