சென்னை, அக். 3 - வானகரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. வானகரம் முதல் நிலை ஊராட்சியில் திங்களன்று (அக்.2) கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காரம் பாக்கம் க.கணபதி, ஊராட்சி மன்றத் தலைவர் ஜமுனா சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கிளை செயலாளர் ஜி.ஜானகிராமன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். அப்போது, எஸ்28 மினி பேருந்து வழித்தடத்தில் மேலும் ஒரு பேருந்தை இயக்க வேண்டும், மேட்டுக்குப்பம் மகளிர் குழு கட்டிடத்தின் மேல் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்திற்கு உபகரணங் களையும், போரூர் கார்டன் பேஸ் 1 மற்றும் பேஸ் 2 பூங்காக்களில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பழுதடைந்த உபகரணங்களை மாற்றி வழங்க வேண்டும், வானகரம் முதல் போரூர் ஆற்காடு சாலை வரை செல்லும் மாவட்ட நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும், மேட்டுக்குப்பம் அண்ணா சாலையில் பாமா ருக்குமணி சமேத கோபால கிருஷ்ணர் கோவில் அருகில் உள்ள தீண்டாமை சுவர் போன்று பெரிய மதில் சுவர் கட்டப்பட்டது. இதில், சுவற்றின் 15 அடி தூரத்தை உடைத்து மேட்டுக்குப் பத்தையும், போரூர் கார்டன் பேஸ் 1, 11 மற்றும் 12வது தெருவையும் இணைக்க வேண்டும். போரூர் கார்டன் பேஸ் 1, பேஸ் 2 இடங்க ளுக்கு அருகில் நூலகம் அமைக்க வேண்டும், சேக்மானியம் பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி னர்.