districts

img

பாதுகாக்கப்பட்ட குடிநீர் கேட்டு திருவிக நகரில் சிபிஎம் பிரச்சாரம்

சென்னை, பிப். 19- வடசென்னை மாவட்டம் திருவிக நகர் பகுதியில் சாலை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார நடைபயணம் ஞாயிறன்று (பிப். 19) நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம். ராம கிருஷ்ணன் நிறைவு செய்து பேசினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.எஸ்.கார்த்திஷ் குமார், பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ், பகுதிக்குழு உறுப்பினர்கள் பா.தேவி, முருகேசன், சுப்பிரமணி, கிருஷ்ணன், சுரேஷ், மோகன், வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைத்து வட்டத்திலும் சமூக நலக்கூடம் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும், பகுதி முழுவதும் அனைத்து தெருக்களிலும் தரமான சாலை அமைக்க வேண்டும், பழைய குடிநீர் குழாய்களை அகற்றி புதிய குழாய்களை அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும், கோயில் நிலங்கள் உட்பட பல்வேறு இடங்க ளில் வசிக்கும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும், ரயில்வே இடத்தில் 60 ஆண்டுகளாக குடியிருப்போரை அகற்று வதை கைவிட வேண்டும், மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும், குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும், கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், இளைஞர்களின் திறன் மேம்  பாட்டிற்காக உடற்பயிற்சி கூடம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரச்சாரம் நடைபெற்றது.

;