districts

img

மொண்டியம்மன் நகரில் சிபிஎம் பிரச்சாரம்

திருவள்ளூர், ஏப் 14- திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதியில் போட்டி யிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆத ரித்து சிபிஎம் சார்பில் மொண்டியம்மன் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.சந்தானம் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பீம்ராவ் பேசுகையில், தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய மோடி எத்தனை முறை வந்தாலும் தமிழக மக்கள் தாமரைக்கு வாக்களிக்க மாட்டார்கள். மழை வெள்ளம் வந்த போது எட்டி பார்க்காத மோடி இப்போது ஏன் வருகிறார்.  ஒவ்வொரு முறை தமிழ் நாட்டிற்கு வரும் போதெல்லாம் ஒரு லோடு செங்கற்கள் கொண்டு வந்திருந்தாலே இந்நேரம் எய்ம்ஸ் மருத்துவ மனையை கட்டி முடித்திருக்கலாம் என பீம்ராவ் நையாண்டி செய்தார். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் பி.நடேசன், ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.வி.எல்லையன், முன்னணி ஊழியர் எம்.வி.நக்கீரன், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீ.வே.கருணாகரன், காங்கிரஸ் நிர்வாகி கிருஷ்ணா மூர்த்தி, சிபிஐ மாவட்ட நிர்வாகிகள் என்.எஸ்.பிரதாப்சந்திரன், குமரேசன், விசிக நிர்வாகிகள் காந்தி, பரசு பார்த்திபன் ஆகியோர் பேசினர்.