districts

98வது வட்டத்தில் சிபிஎம் பிரச்சாரம்

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்கு கேட்டு ஞாயிறன்று (ஏப்.7) வில்லிவாக்கம் பகுதி 98வது வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. 98 வது வட்ட மாமன்ற உறுப்பினர் ஆ. பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்ற இந்த துண்டறிக்கை பிரச்சாரத்தை அ.வெற்றியழகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பகுதிச் செயலாளர்கள் வே.வாசு (திமுக), எம்.ஆர். மதியழகன் (சிபிஎம்), மாவட்ட குழு உறுப்பினர் ஜி. அன்பழகன், சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர்கள் பகுதி குழு உறுப்பினர்கள் ஏ.எல்.மனோகரன், சி. மார்ட்டின், யூஜின், வட்டச் செயலாளர்கள்  தேவராஜ் (திமுக), எஸ். ராமமூர்த்தி, என். ஜோதி (சிபிஎம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.