districts

img

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட குழாய்கள்

சென்னை, அக்.4- காஞ்சிபுரம் மாவட்டம் செவி லிமேடு பகுதியில் இயங்கி வரும் ஜிஆர்  டைல்ஸ் அன்ட் ஸ்டில்ஸ் என்ற கடை யில் டாடா நிறுவ னத்தின் பெயரில் போலியாக தயாரிக் கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அறிவு சொத்துரிமை பிரிவினருக்கு அந்த நிறுவனங்கள் சார்பில் புகார்கள் வந்தன.  இதையடுத்து   திருபெரும்புதூரில் உள்ள அறிவுசொத்துரிமை பிரிவு காவல் ஆய்வாளர் புஷ்பா மற்றும் அவரது குழுவினர் திடீர் சோதனை நடத்தியபோது பிரபல நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலியான குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.