districts

கொரோனா நெறிமுறைகள் விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை, ஜூலை 2- தமிழக பொது சுகாதாரத்துறை, சென்னை  மாநகராட்சி, யூனிசெப், உலக சுகாதார நிறுவ னம், மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலு வலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தி ருந்த கொரோனா நடத்தை நெறிமுறை  குறித்த  நான்கு நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமி ழக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளி யன்று (ஜூலை 2) சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னை திருவான்மியூர் மார்க்கெட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கொரோனா நடத்தை நெறிமுறை  குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடி யசைத்துத் துவக்கி வைத்தார். கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பதாகை கள் மற்றும் அட்டைகள், ஒலிப்பெருக்கிகள் அடங்கிய 10 பிரச்சார வாகனங்கள், சென்னை யில் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதி களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளன.

இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பு  நடவடிக்கைககளான முகக்கவசம் அணிதல்,  கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், தனிநபர்  இடைவெளியைக் கடைபிடித்தல், தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் ஆகியவை குறித்து தன்னார்வலர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இந்தப் பிரச்சாரம் ஜூலை 2  முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த  நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை செயலர்  ராதாகிருஷ்ணன், சென்னை பத்தி ரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் மா.அண்ணாதுரை, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர்.  செல்வ விநாயகம், யூனிசெப் மாநில அதிகாரி  சுகதா ராய், உலக சுகாதார நிறுவன அதிகாரி  அருண் குமார், தமிழக பொது சுகாதாரத்துறை  இணை இயக்குனர்  விஜயலட்சுமி, பத்திரிகை  தகவல் அலுவலக இயக்குநர்  குருபாபு பல ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;