கோயம்பேடு சந்தையில் பூங்கா அமைக்கும் பணி
சென்னை,ஆக.13- கோயம்பேடு மார்க்கெட் வளாகத் தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடை கள் உள்ளன. இதில், காய்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள கடைகளில் வியாபாரி கள் மற்றும் தொழிலாளிகள் என 20 ஆயிரத்துக்கும்மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனா்.இந்நிலை யில், தொழிலாளர்கள் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ளவா்கள் பயனடையும் வகையில், ஏற்கெனவே ரூ.86 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.
செய்யூரில் தெருநாய்கள் அட்டகாசம்
செங்கல்பட்டு,ஆக. 13- செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் இவரது மகன் ஜெஃப்ரின் (வயது4) வீட்டில் எதிரில் விளை யாடி கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த வெறி பிடித்த நாய் சிறுவனின் வலது தோள்பட்டை பகுதி யில் கடித்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல் பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். பின்னர் அதே நாய் அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ் (30) என்பவர் உட் பட 3பேரை கடித்து குதறியது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் உலா வரும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத் திடம் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.
மின்சார ரயில் சேவை ரத்து நீட்டிப்பு
சென்னை,ஆக.13- தாம்பரம் பணிமனையில் கடந்த 23-ம் தேதி முதல் பராமரிப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணி வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில், பராமரிப்பு பணி வரும் 18-ம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாகவும், அதற்காக மின்சார ரயில் சேவையில் வரும் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை புதிய மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், புதிதாக 8 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த பெண் உதவிஆய்வாளர்
சென்னை, ஆக. 13– சென்னையில் பிரபல ரவுடி ரோகித் ராஜை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதில் காயமடைந்த ரவுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் பிரபல ரவுடியான ரோஹித் ராஜன் மீது மைலாப்பூர், சேத்துப்பட்டு, பல்வேறு காவல் நிலையங் களில் 20க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட மயிலாப் பூரை சேர்ந்த ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக ரோஹித் ராஜன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரோஹித் ராஜனை தேனியில் வைத்து கைது செய்து போலீசார் சென்னை அழைத்து வந்தனர். இந்த நிலையில் செவ்வாயன்று அவரை கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்வதற்காக டி.பி. சத்திரம் பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது ரவுடி ரோகித் ராஜ், 2 காவலர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதைத் தொடர்ந்து உதவிஆய்வாளர் கலைச்செல்வி, தற்காப்பிற்காக ரோகித் ராஜ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படு கிறது. இதில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதையடுத்து சென்னை கீழ்ப்பாகம் அரசு மருத்துவ மனையில் ரோகித் ராஜுக்கு சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது. ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் உதவி ஆய்வாளர் கலைச் செல்வியை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார்.
வழிபாட்டு உரிமையை மறுத்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு
திருவள்ளூர், ஆக. 13- வழுதலம்பேடு கிராமத்தில் பட்டியலில் இன மக்களின் வழிபாட்டு உரிமையை மறுத்த 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியை அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் கடந்த 22 வருடங்கள் கழித்து எட்டியம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகள் ஆக 9 அன்று நடைபெற்றது. இதில் இரு சமூகத்தினர் இடையே கோவிலில் வழிபடுவது குறித்து சாதி பாகுபாடு காரணமாக பட்டியலின மக்கள் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக பட்டியலின மக்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவணகுமாரிடம் அளித்த புகாரின் பேரில் கடந்த ஆக 8 அன்று இருதரப்பினருக்கும் நடைபெற்ற பேச்சு நடைபெற்றது. இதன் அடிப்படையில் பட்டியலின மக்கள் காவல்துறை பாதுகாப்புடன் கோயில் வழிபாடு செய்ய முற்பட்டபோது மாற்று சமூகத்தினர் கோவிலுக்கு செல்லும் வழி பட்டா நிலம் எனக் கூறி பட்டியலின மக்களை தடுத்தனர். காவல்துறையினர் மாற்று வழி யில் அழைத்துச் சென்றபோதும் மாற்று சமூகத்தினர் தடுத்து பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசி திருப்பி அனுப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொன் னேரி கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரி களையும் கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலை மையை உணர்ந்த வருவாய்த் துறையினர் கோவிலின் வாயிலை பூட்டி சீல் வைத்த னர். இது தொடர்பாக பட்டியலின மக்கள் அளித்த புகாரின் பேரில் வழுதலம்பேடு ஊராட்சி மன்ற பெண் தலைவர் மணிமேகலை மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ், ரகுநாதன், சுப்ரமணி, எட்டியப்பன், முருகன், முனுசாமி ஆகிய 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பட்டியலின மக்கள் தங்களை காவல்துறையினரின் பாதுகாப் புடன் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு
சென்னை,ஆக.13- தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.30 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், காரிய மண்டபம் ஆகியவற்றை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்தார். பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாம்பரம் மாநகராட்சி 29, 30வது வார்டுகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 31வது வார்டில் காரிய மண்டபம் ஆகியவற்றை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதியி டம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டு, 29வது வார்டில் உள்ள ஜெயஸ்ரீ முத்துக்குமாரசுவாமி உயர்நிலைப் பள்ளியில் ரூ.9.70 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.