districts

img

தோழர் பரசுராமன் காலமானார்

சென்னை, ஏப். 28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிக்கரணை கிளை உறுப்பினர் எம்.பரசுராமன் சனிக்கிழமையன்று (ஏப்.27) உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 65. அச்சு தொழிலாளியான தோழர் எம்.பரசுராமன் சைதாப்பேட்டை, பள்ளிக் கரணை பகுதியில் கட்சி, வெகுஜன அமைப்பு களை வளர்ப்பதில் முன்னணி ஊழியராக செயல்பட்டவர். அவரது மனைவி, மகள்கள் கட்சி மற்றும் வெகுஜன அமைப்பு களில் செயல்பட்டு வந்தனர். பள்ளிக்கரணை, கர்மேல் குறுக்கு தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சி யின் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), தமுஎகச மாநில பொருளாளர் சைதை ஜெ. சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.வனஜகுமாரி, டி.சுந்தர், ச.லெனின், மூத்த தலைவர் டி.ராமன், சோழிங்கநல்லூர் பகுதிச் செய லாளர் ப. ஜெயவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.அரிகிருஷ்ணன், எம்.சி.பிரபாகரன், எஸ்.முகமது ரஃபி, எம்.ஆர்.சுரேஷ், ம.விஜயகுமார், ரா.பாரதி, உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அன்னாரது உடல் கீழ்க்கட்டளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.