districts

தோழர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா கொண்டாட்டம் சனிக்கிழமை (ஜன. 18) ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டையில் சிபிஐ மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்,  வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.திரவியம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், மாமன்ற உறுப்பினர்கள், மோ.ரேணுகா, பா.விமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.