districts

img

தோழர் லீலாவதி நினைவு தினம்

சென்னை, ஏப். 23 - வில்லாபுரம் வீராங்கனை தோழர் லீலாவதி 27வது நினைவு தினம் செவ்வா யன்று (ஏப்.23) வேளச்சேரி பகுதியில் அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரமணி, திருவான்மியூர் தெற்கு மாட வீதி மணி கூண்டு ஆட்டோ நிறுத்தம், டைடல் பார்க் ஆட்டோ நிறுத்தம் ஆகிய இடங்களில் லீலாவதி படத்திற்கு அஞ்சலி செலுத்தி, செங்கொடியேற்றி பொது மக்களுக்கு மோர் உள்ளிட்ட பானங்களை வழங்கப்பட்டது. தரமணி பகுதி கட்சி கிளைகள் சார்பில் நடைபெற்ற நிகழ்விற்கு குமரேசனும், டைடல் பார்க் நிறுத்தத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு பகுதி பொருளாளர் பாபுவும், திருவான்மியூர் தெற்கு மாட வீதி ஆட்டோ நிறுத்தம் சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிளைச் செயலாளர் வெள்ளமுத்துவும் தலைமை தாங்கினர்.   இந்த நிகழ்வுகளில் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி, பகுதிக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், கோபால், ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். விம்கோ நகர் தோழர் லீலாவதியின் 27ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருவொற்றியூர் விம்கோ நகரில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, மாநில நிர்வாகி செல்வகுமாரி, பகுதிச் செயலாளர் கஸ்தூரி, தலைவர் அலமேலு, நிர்வாகிகள் தனலட்சுமி, அம்சா, பொது தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் கே.ஆர்.முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.