சென்னை, நவ. 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்மஞ்சேரி கட்சி கிளை தோழர் டி கோரி டிசோசா ஞாயிறன்று (நவ.5) காலமானார். அவருக்கு வயது 82. மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய டி கோரி டிசோசா, அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் முன்னணி ஊழியராக செயல்பட்டவர். பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, மார்க்சிஸ்ட் கட்சியில் செயல்பட்டு வந்தார். செம்மஞ்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலா ளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் கே.வனஜகுமாரி, ஜி.செந் தில்குமார், சோழிங்க நல்லூர் பகுதிச் செயலாளர் ப.ெஜயவேல், கிளைச் செயலாளர் லட்சுமணன், போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலா ளர் வி.தயானந்தம், மூத்த தலைவர் எம்.சந்திரன், போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் வீரராகவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து திங்க ளன்று (நவ.6) செம்மஞ்சேரி மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.