மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் பி.ராமமூர்த்தி நினைவு தினத்தை முன்னிட்டு பெண்ணாடத்தில் நடைபெற்ற சிபிஎம் கடலூர் மாவட்ட மாவட்ட மாநாட்டில் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், எஸ்.ஜி. ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.