சென்னை, பிப். 22 - சென்னை பல்கலைக் கழகத்தின் சிண்டி கேட் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவிற்கு (சிண்டிகேட்) மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை தேர்தல் மூலமாக 4 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். பிப்.1ந்தேதி தேர்தல் அறிவிப்பை பல்கலைக் கழக நிர்வா கம் வெளியிட்டது. மனுதாக்கல் செய்ய இறுதி நாளான பிப்.7 ந் தேதி மாலை 4 மணி வரை வாக்காளர் களின் பட்டியலை வெளியிடவில்லை. அதன்பிறகே பட்டியலை வெளியிட்டது. 91 சுயநிதிக் கல்லூரிகளுடைய முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்தலில் நிற்கும் வாய்ப்பை பல்கலைக் கழகம் பறித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் செனட், சிண்டிகேட் தேர்தலில் பங்கேற்று வாக்களித்து வருகின்றனர். இந்த நடவடிக் கையை கண்டித்து அரசு கலைக் கல்லூரி சங்கம் தேர்தலை புறக்கணித்துள்ளது. மனுத்தாக்கல் செய்த குறிப்பிட்ட அரசு உதவி பெறும் தன்னாச்சி கல்லூரிகளுடைய முதல்வர்கள், ஆசிரியர்களின் விண்ணப் பங்களை மட்டும் தேர்தல் அதிகாரியான பதிவாளர் ஏற்றுக் கொண்டுள்ளார். நூற்றுக் கும் மேற்பட்ட சுயநிதிக் கல்லூரி முதல்வர் கள், ஆசிரியர்களின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளார். எனவே, தேர்தலை ரத்து செய்ய வேண்டும். பல்கலைக் கழக நிதி நெருக் கடியை சரி செய்து, அதன்பின்னர் சுயநிதி கல்லூரி, அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி உறுப்பினர்கள் என அனைவரும் பங்கேற்கும் வகையில் தேர் தலை நடத்த வேண்டும் என்று சென்னை பல்கலைக் கழக பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.