சென்னை,ஆக.17- சென்னை ஆழ்வார் பேட்டை யில் உள்ள காவேரி மருத் துவமனை, மெட்ராஸ் வடக்கு ரோட்டரி கிளப் மற்றும் பே ஃபோர்ஜ் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் நடமாடும் நலவாழ்வு கிளினிக்கை (மொபைல் வெல்னஸ் கிளினிக்) தொடங்கியிருக்கிறது. வசதியற்ற ஏழை, எளியோருக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் மருந்துகளை வழங்குவதன் வழியாக சென்னையிலும் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலும் உடல்நல சிகிச்சையை பெறுவதில் நிலவும் இடைவெளிகளை நிரப்புவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். தொடக்கவிழாவில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தா. வேலு ஆகியோர் கலந்து கொண்டனர். காவேரி நடமாடும் நலவாழ்வு கிளினிக்கில் ஈசிஜி, எக்கோகார்டியோகிராம், எக்ஸ்ரேக்கள் மற்றும் பிஎம்டி ஸ்கேனர்கள் உட்பட மேம்பட்ட நோயறிதல் சாதன வசதிகளை உள்ளடக்கியதாகும்.