districts

ரூ4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள்

வேலூர் மாவட்டத்தில் சுமார் ரூ4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி, வேலூர் மக்களவை உறுப்பினர் து.மு.கதிர் ஆனந்த் கீ.வ. குப்பம் ஊராட்சி ஒன்றியம் அரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  நீ.செந்தில் குமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செ.மணிமொழி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, கீ.வ.குப்பம் ஒன்றியக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.