ராணிப்பேட்டை, செப். 11 - ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் நகர்மன்ற தலைவர் எஸ்.டி. முகமது அமீன் புதனன்று (செப். 11) காலமானார். அவரது உடலுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத் காந்தி, ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன்,உமர்முக்தியார்(சிபிஎம்) உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.