districts

img

பாஜக அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் வழங்க வலியுறுத்தி ராணிப்பேட்டையில் சிஐடியு சார்பில் மாவட்டத் தலைவர் ஆர். வெங்கடேசன் தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில செயலாளர் ஆ. கிருஷ்ணமூர்த்தி,  மாவட்ட செயலாளர் ஆ. தவராஜ், வாலாஜா பொது தொழிலாளர் சங்கம் மாவட்டத்தலைவர் என். காசிநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் டி. சந்திரன், கட்டுமான சங்கம் மாவட்டச்செயலாளர்  த. ஞானமுருகன், அங்கன்வாடி மாநில செயலாளர் வி. அமிர்தவள்ளி, டேனரி சங்கம் மாவட்டத்தலைவர் ஆர். மணிகண்டன், லிக்காய் கோட்டபொதுச்செயலாளர் தா. வெங்கடேசன், உள்ளாட்சி மாவட்ட செயலாளர் பி. கோதண்டபாணி, சிஐடியு மாவட்ட பொருளாளர் என்.ரமேஷ், உள்ளாட்சித்துறை கவுரவத்தலைவர் ஏவிஎம் சீனிவாசன், ஆட்டோ மாவட்ட தலைவர் பி.மணி உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.