ஓசூரில் சிஐடியு,ஏஐடியுசி சார்பாக சாராட்சியர் அலுவலகம் முன்பிருந்து மே தின பேரணியும்,ராம்நகரில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் ஸ்ரீதர்,மாதையன் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் வாசுதேவன், ஏஐடியுசி துணைச் செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன்,ஏஐடியூசி மாவட்ட தலைவர் சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாவட்ட பொருளாளர் ஸ்ரீதரன் நன்றி கூறினார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன்,மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன்,சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பி.ஜி.மூர்த்தி கோவிந்தம்மாள்,தேவி,குணசேகரன், கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.