districts

img

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சோழிங்கநல்லூர் தொகுதி

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சோழிங்கநல்லூர் தொகுதி  திமுக வேட்பாளர் எஸ்.அரவிந்த் ரமேசுக்கு வாக்கு கேட்டு புதனன்று (மார்ச் 31) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோழிங்க நல்லூர் பகுதி சார்பில் பெரும்பாக்கத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.  பகுதிக்குழு உறுப்பினர் கே.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், பகுதிச் செயலாளர் ஜி.வீரா, மூத்த தலைவர் டி.ராமன் உள்ளிட்டோர் பேசினர். துரைப்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் ஜி.வீரா, மாவட்டக்குழு உறுப்பினர் ம.விஜயகுமார் மற்றும் எம்.ஆர்.சுரேஷ் (வாலிபர் சங்கம்), ஜான்சி (மாணவர் சங்கம்) உள்ளிட்டு கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசினர்.

;