districts

img

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி குழந்தைகள் நூதன பிரச்சாரம்

சென்னை, மே 31 - அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி புதனன்று ( மே 31) தரமணியில் குழந்தைகள் நூதன பிரச்சாரம் செய்தனர். தனியார் பள்ளிகளை நோக்கி சென்ற மாணவர்களை அண்மை காலமாக அரசு பள்ளிகள் ஈர்த்து வருகின்றன. இதற்கு வலு சேர்க்கும் விதமாக அரசு பல்வேறு கட்டமில்லா பொருட்களை வழங்குவதோடு, உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், கற்றல் சூழலை மேம்படுத்தவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக பாலர் பூங்கா அமைப்பு சார்பில் தரமணி யில் குழந்தைகள் பங்கேற்ற நூதன ரயில் பிரச்சாரம் நடைபெற்றது. 3 இடங்க ளில் இருந்து குழந்தைகள் ரயில் போல் அணிவகுத்து கூவியபடி, அரசு பள்ளி யின் பெருமைகளை முழக்கமிட்டு தெருத்தெருவாக ஓடிவந்தனர். பள்ளி எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தங்களின் எதிர்ப்பார்ப்புகளை ஓவி யங்களாக கொண்டு வந்து காட்சிப்படுத்தினர். இதன் நிறைவாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய குழந்தைகள், அரசு பள்ளி களில் நிலவும் வகுப்பறை, விளையாட்டு மைதானம், ஆசிரியர் பற்றாக்குறைகளை சரி செய்ய வேண்டும், பள்ளிகளில் நடை பெறும் வகுப்பறை கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டும், கட்டுமான பணி நடைபெறும் போது மாற்று இடத்தில் முழு நேரமாக வகுப்புகளை நடத்த வேண்டும் என்று தங்களது தேவைகளை வலியுறுத்தினர். இந்த நிகழ்வில் தரமணி காவல் நிலைய ஆய்வாளர் பழனி, பாலர் சங்க பொறுப்பாளர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;