கிருஷ்ணகிரியில் மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஓசூர் பெண்கள் அணி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. இதில் வெற்றி பெற்ற ஓசூர் பெண்கள் அணி பயிற்சியாளர்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷை சந்தித்தனர். அப்போது, பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.