சென்னை பெருநகர மோட்டார் வாகன சங்கத்தின் சூரப்பட்டு பகுதி வாகன நிறுத்த உறுப்பினர் எஸ்.சரவணன் மறைவையொட்டி அவரது குடும்ப பாதுகாப்பு நிதி 10 ஆயிரம் ரூபாய் அவரது மனைவி ஞானசவுந்தரியிடம் சம்மேளன பொதுச்செயலாளர் வி.குப்புசாமி வழங்கினார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், கண்ணன், வெங்கடேசன், கோபி, தினகரன், பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.