districts

img

சென்னை வெள்ளத்திலிருந்து தப்ப சொந்த செலவில் படகு

சென்னை, நவ.3- மழை காலம் நெருங்கு வதால் வேளச்சேரி டான்சி நகர், சீதா ராம் நகர், ராம் நகர், விஜயநகர் பகுதிகளில் மக்கள் தாங்களாகவே மழை வெள்ள பாதுகாப்பு அம்சங்களாகிய ரப்பர் படகு, லைஃப் ஜாக்கெட் களை வாங்கியுள்ளனர். சென்னையில் பருவ மழை பெய்யும் போ தெல்லாம் வேளச்சேரியில் உள்ள டான்சி நகர், சீதா ராம் நகர், ராம் நகர், விஜய நகர், வி.ஜி.பி, செல்வா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகும் சூழல் உள்ளது. இதன் காரணமாக மழை வெள்ளத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பு கருதி ரப்பர் படகு மற்றும் லைப் ஜாக்கெட்டுகளை தாங்களாகவே வாங்கி யுள்ளனர்.