districts

சென்னை விரைவு செய்திகள்

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கடலூர், மார்ச் 21- கடலூர் மாவட்டம், விருத்தாசலம் காட்டுக் கூடலூர் சாலையில் செல்வராஜ் நகரில் நாகத்தம்மன் கோவில் உள்ளது. திங்கட்கிழமை இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். வழக்கம் போல் கோவிலை திறக்க வந்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு தனியாக கிடப்பதை கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார். பின்னர், இதுகுறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


செல்போன் கோபுரம்: கிராம மக்கள் எதிர்ப்பு

அரக்கோணம், மார்ச் 21- அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருந்ததிப்பாளையத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது வீட்டுமனையில் செல்போன் கோபுரம் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். இதனால் ஊழியர்கள் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினர். செல்போன் கோபுரம் அமைத்தால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள் என்பதால் அங்குள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பேரூ ராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறை  யிடம் கடந்த மாதம் மனு அளித்தனர். அந்த மனுவின் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், இரவோடு இரவாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை ஊழியர்கள் செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தக்கோலம் - பேரம்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


கஞ்சா விற்பனை:  6 பேர் கைது

சிதம்பரம், மார்ச் 21- சிதம்பரம் மற்றும் அண்ணாமலைநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 6  இளைஞர்களை காவல் துறையி னர் கைது செய்தனர். மேலும் அவர்களிட மிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சிதம்பரம் நகர் பகுதியில் பல்வேறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக சிதம்பரம் நகர காவல் துறையினருக்கு தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் சிதம்பரம் நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது சிதம்பரம் சின்ன கடை தெரு அரசமரம் அருகே 3 வாலி பர்கள் தள்ளு வண்டியில் பானிபூரி விற்பனை செய்வது போல் நின்று கொண்டிருந்த னர். சந்தேகமடைந்த காவல்துறையினர் 3 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர். அதில் சிதம்பரம் ஓமகுளம் ஜமால் நகரை சேர்ந்த சுல்தான் (22), சீர்காழி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருணா  மூர்த்தி (25), சிதம்பரம் தொப்பையின் தெருவில் வசிக்கும் உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டம் மேகனா கிராமத்தை சேர்ந்த கல்லு மகன் அஜய் லாலு  (25) (இவர் பானிபூரி விற்பனை செய்பவர்) இவர்கள் மூன்று பேரும் சிதம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலொ 200 கிராம் கஞ்சாவையும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய பானி பூரி தள்ளு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.  அதேபோல் அண்ணாமலைநகர் பகுதியிலும் கஞ்சா விற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 சாலை விபத்தில் வியாபாரி பலி

வாணியம்பாடி, மார்ச் 21- வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் சிக்கிய  பூ வியாபாரி உயிரிழந்தார்.  வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை அருகே உள்ள துருஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூ வியாபாரி சதீஷ்குமார் (19). இவர் காதர் பேட்டை பகுதியிலிருந்து வேலூருக்கு தனியார் பேருந்தில் பூ மூட்டையை ஏற்றினார். அப்போது ஓட்டுநர்  பேருந்தை திடீரென்று எடுத்ததாக கூறப்படுகிறது.  நிலைதடுமாறி கிழே விழுந்த சதீஷ்குமார் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ்குமார் பரிதாபமாக மரணமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி நகரக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வேலூரை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஏகாம்பரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

;