districts

சென்னை விரைவு செய்திகள்

விழுப்புரத்தில் கோட்ட அளவில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம், ஏப். 1- விழுப்புரத்தில் கோட்ட அள வில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் மாதந்தோறும் நடைபெறு கிறது. அதன்படி, விழுப்புரம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் வரும் 5ஆம் தேதி காலை 11 மணிக்கும், கண்ட மங்கலம் செயற்பொறியாளர் அலு வலகத்தில் 11ஆம் தேதி காலை 11 மணிக்கும், செஞ்சி செயற்பொறியாளர் அலுவலகத்தில் 18ஆம் தேதி காலை 11 மணிக்கும், திண்டிவனம் செயற்பொறி யாளர் அலுவலகத்தில் 25ஆம் தேதி காலை 11 மணிக்கும் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது.   மின் நுகர்வோர்கள், இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரி வித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. மேலும் குறைகேட்பு கூட்டம் நடைபெறும் நாளை அரசு விடுமுறை நாளாக இருப்பின் விடு முறைக்கு அடுத்து வரும் வேலை நாளில் குறைகேட்பு கூட்டம் நடை பெறும் என மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திர விஜய் தெரிவித்துள்ளார்.


வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வேலூர், ஏப். 1- வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (43). இவர் பெங்களூருவில் குடும்பத்துடன் வசிக்கிறார். இந்நிலையில் இவர் சனிக்கிழமை (ஏப். 1) காலை தனது குடும்பத்துடன் பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு 2 சவரன் நகை, ரூ.10 ஆயிரம், ஒரு ஜோடி வெள்ளி குத்து விளக்கு மற்றும் அரிசி மூட்டையை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சுந்தரராஜன் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மின் வேலியில் சிக்கி விவசாயி பலி

விழுப்புரம், ஏப். 1- விழுப்புரம் மாவட்டம், வள வனூர் கள்ளிப்பட்டு அருகே சின்ன மடம் கிராமத்தை சேர்ந்தவர் விவ சாயி ராமதாஸ் (55). இவர் சனிக் கிழமை அதிகாலை தனது நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றார். அதே ஊரைச் சேர்ந்த இவரது உற வினர் பிரபுவின் நிலத்தை கடந்து தான் இவரது நிலத்திற்கு செல்ல வேண்டும். இந்த பகுதியில் காட்டுப் பன்றி களின் அட்டகாசம் அதிகமாக உள்ள தால், பிரபு தனது நிலத்தை சுற்றி மின் வேலி அமைத்திருந்தார். இந்த மின்வேலியில் எதிர்பாராத வித மாக சிக்கி ராமதாஸ் சம்பவ இடத்தி லேயே பலியானார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த பிரபு, ராம தாஸ் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே ராம தாசின் உடலை தூக்கிக் கொண்டு போய், அவரது நிலத்தில் போட்டுள் ளார். பின்னர் ஊருக்குள் வந்து ராமதாஸ் நிலத்தில் இறந்து கிடப்ப தாக கூறியுள்ளார். உடனடியாக அங்கு சென்ற கிராம மக்கள் ராமதாஸ் மின்வேலி யில் சிக்கி இறந்ததை கண்டு பிடித்த னர். இதுகுறித்து வளவனூர் காவல் நிலையத்திற்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ராமதாஸ் உடலைக் கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல் துறையினர் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளை நிலங்களில் மின் வேலி அமைக்கக் கூடாது என்றும். அவ்வாறு இருந்தால் அதனை உடன டியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கடந்த சில தினங்க ளுக்கு முன் விழுப்புரம் ஆட்சி யர் பழனி அறிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது.


சாலை விபத்தில் வாலிபர் பலி

ஆம்பூர், ஏப். 1- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கரும்பூர் ஊராட்சி பெரிய கரும்பூர் பகுதியை சேர்ந்த வர் சாமுண்டி. இவரது மகன் சந்தோஷ் (26). இவர் இறந்தவர்க ளின் உடல்களை அடக்கம் செய்யும் வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்நிலை யில் இவர் மோட்டர் சைக்கிளில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் சென்று கொண்டி ருக்கும் போது,  ஆம்பூர் அடுத்த பாங்கி ஷாப் சுடுகாடு அருகே தரைப்பாலத்தின் மீது மோட்டர் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.


அவசர தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும்: ஆட்சியர்

ராணிப்பேட்டை, ஏப். 1- வெயில் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள அவசர தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார். ராணிப்பேட்டைமாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில், ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயில் காலங்களில் ஏற்படும் நோய்கள் அதாவது, தோல் எரிச்சல், சின்னம்மை, தட்டம்மை, வெப்ப பக்கவாதம், மயக்கம் போன்ற நோய்கள் தாக்ககூடும். பொதுமக்கள் அனைவரும் கீழ்கண்ட வழிமுறை களை பின்பற்றி வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப அடிக்கடி நீர் பருகவேண்டும். பழங்கள், இளநீர், பழச்சாறு, மோர், ஓ.ஆர்.எஸ். கரைசல் போன்ற நீர் ஆகாரங்களை அதிகளவில் உட்கொள்ள வேண்டும். வெளியே செல்லும் போது தவறாமல் குடிநீர் எடுத்து செல்ல வேண்டும். வெளிர் காற்றோட்டமான பருத்தி உடைகளை அணிய வேண்டும். குடை, துண்டு பயன்படுத்த வேண்டும்.  வெயிலின் தாக்க அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அவசர தேவையின்றி வெளியே செல்லக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 

;