திமுக பிரமுகர் தற்கொலை
கோவை, ஜன.25. திமுக கோவை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா ளர் பையா கவுண்டர் (எ) கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை யும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திமுக-வின் கோவை மேற்கு மாவட்ட முன்னாள் செயலா ளரான பையா கவுண்டர் (எ) கிருஷ்ணன் (65). காளப்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக சார்பில் கவுண்டம்பா ளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்விய டைந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு திமுகவின் மாவட்ட செய லாளர் பொருப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலை யில், கடந்த சில மாதங்களாக அரசியல் நிகழ்வுகளில் எதிலும் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். இருப்பினும் மக்கள் செல் வாக்கு மிக்க இவர், கோவில் விழாக்கள், பகுதி மக்களின் குடும்ப விழாக்களில் மட்டுமே பங்கேற்று வந்தார். இந்நிலை யில், புதனன்று, காளப்பட்டி அருகில் ஒரு கோவில் கட்டுமா னம் சம்பந்தமாக கோவில் நிர்வாகிகளுடன் கலந்துரையா டிவிட்டு, தோட்டத்து வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். வியாழ னன்று காலை தோட்டத்தில் வேலை செய்தவர்கள் சென்று பார்த்த போது தூக்கு மாட்டிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்துள்ளனர். திமுகவின் செல்வாக்கு மிக்க தலை வராக வலம் வந்த பையா கவுண்டர் மறைவு திமுக வட்டா ரங்களில் மட்டுமல்லாது அரசியல் வட்டாரங்களிலும் அதிர்ச்சி யும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர் பாக கோவில்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் நுழைந்த கரடி
உதகை,ஜன. 25- கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்குள் கரடி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதியில் விடவேண் டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிக ளில், யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தற் போது அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கரடி, சிறுத்தை, போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது அதிக ரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மனிதன்-விலங்கு மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதனன்று இரவு கரடி ஒன்று, வனப்பகுதியில் இருந்து வெளியேறி, கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து. பின்னர் அங்கு பூட்டியிருந்த கேட்டை தாண்டி வீட்டுக்குள் புகுந் தது. மாடிப்படிக்கட்டில் ஏறிய கரடி உணவு தேடி சுற்றி திரிந் தது. அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காததால் அந்த கரடி மீண்டும் வந்த வழியாக திரும்பி காட்டுக்குள் சென்று விட்டது. இது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள் ளது. வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிக்க வேண்டுமென குடியி ருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை
கோவை,ஜன.25- தொழில் அதிபர் வீட்டில் நுழைந்து, அங்குள்ளவர்களை கட்டி வைத்து பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசிப்பவர் தொழில் அதிபர் கமலேஷ். இவர் பஞ்சு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று, வீட்டில் நுழைந்த பத்துக்கும் மேற்பட்ட மர்ம கும்பல், வீட்டில் இருந்தவர்களை கயிற் றால் கட்டி விட்டு, பணம் மற்றும் நகைகளை கொள்ளை யடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, இத்துணிகரச் சம் பவம் குறித்து ஆர்எஸ்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இப்பகுதி யில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ள னர். கமலேஷ் வீட்டில் இல்லாத சூழலை பயன்படுத்தி இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாட்கோ மூலம் கடனுதவி பெற அழைப்பு
ஈரோடு, ஜன. 25- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotheraphy Clinic) அமைத்திட மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இதில், உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotheraphy Clinic) தொடங்க தனியார் நிறுவனம் மூலமாக சொந்தமாக கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கும் மற்றும் இடம் இல்லாதவர்களுக்கு வாடகை அடிப்படையில் இடங்கள் தேர்வு செய்து தரப்படும். அங்கு உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்தும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும். தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து, இலவச ஆலோசனைகளும் தனியார் நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். இதற்கான உரிமையாளர் கட்டணம் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும். எனவே, உடற்பயிற்சி சிகிச்சை பயிற்சியில் பட்டப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அல்லது எதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் இக்கடனுதவி பெற தகுதியுடையவர்களாவர். புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இத்தொழிலுக்கு ரூ.6 லட்சம் திட்டத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியமாக 35% அல்லது அதிகபட்சம் ரூ.2.10 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளிகள் 5% முதல் 10% சொந்த முதலீட்டினை வங்கியில் செலுத்தி வங்கி கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு தொலைபேசி எண் 0424 2259453 அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள்
ஈரோடு, ஜன. 25- ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளி லும் குடியரசு தினமான வெள்ளியன்று (இன்று) முற்பகல் 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக் கையினை பார்வைக்கு வைத்தல், கொசுக்கள் மூலம் பர வும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவா திக்கப்படும். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் காலில் விழுந்த எம்எல்ஏ!
சேலம், ஜன.25- இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், பள்ளி மாண வர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் பங்குபெற்று மாணவர் களிடையே உரையாற்றினார். தொடர்ந்து பேசிய அவர், எனது உரையை சுருக்கமாக முடித்து கொள்வதாகவும், இங்கு அனைத்து கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தாலும், பள்ளி மாணவர்களுக் காகவும் மக்கள் நலனுக்காகவும் அனைவ ரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இந்த பள்ளிக்கு வகுப்பறை கட்ட சட்டமன்றத்தில் பலமுறை பேசி இப்பொழுது அதற்கான பணி கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அருகிலுள்ள ஒரு கல்லூரிக்கு அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு வர சிறிது காலதாமதமாகி விட்டதால், உடனடியாக மிதிவண்டி வழங்கிவிட்டு விழாவை முடித்துக் கொள்வதாக கூறி சட்டமன்ற உறுப்பினர் அருள் நன்றி கூறி அமர்ந்தார். அதற்கு எதிர்ப்பு தெரி வித்து சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்கள் அமைப்பினருக்கும் பேச வாய்ப்பு அளிக்காவிட்டால் சைக்கிள் வழங் கும் விழாவை நடத்த விடமாட்டோம் என தெரிவித்தனர். அப்போது, சட்டமன்ற உறுப் பினர் அருள், தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டு பள்ளி மாணவ, மாணவிகள் முன்னி லையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தியது.
டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி
சேலம், ஜன.25- சுமார் 50 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்ப வம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், காடை யாம்பட்டி அருகே உள்ள தளவாய்பட்டியில் இயங்கி வரும் தனியார் சூர்யா புளு மெட்டல் என்ற கல்குவாரி யில், பொட்டியபுரம் ஊராட்சி யைச் சேர்ந்த சதீஷ்குமார் (35) என்பவர் கடந்த 10 ஆண் டுகளாக வேலை செய்து வரு கிறார். இந்நிலையில், புத னன்று மாலை கல்குவாரி யில் கூலித்தொழிலாளி ஓட்டி சென்ற டிராக்டர் சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத் துக்குள்ளானது. இதில் படு காயமடைந்த சதீஷ்குமாரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத் துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து தக வலறிந்து வந்த தீவட்டிப் பட்டி காவல் துறையினர் தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
சிறுவர்கள் மாயம்
தருமபுரி, ஜன.25- தருமபுரியை அடுத்த வெண்ணாம்பட்டி பகுதி யைச் சேர்ந்த கூலித் தொழி லாளி மகாலட்சுமி (32). இந்நி லையில், இவரது மகன்க ளான சர்வேஸ்வரன் (9), சஞ் சய் (7) ஆகியோர், கடந்த ஜன.23 ஆம் தேதியன்று அருகிலுள்ள பூங்காவில் விளையாட சென்றுள்ளனர். ஆனால், இருவரும் வீட் டிற்கு திரும்பி வரவில்லை. எனவே, காணாமல் போன சிறுவர்கள் குறித்து மகாலட் சுமி அளித்த புகாரின்பேரில், தருமபுரி நகர காவல் துறையி னர் விசாரித்து வருகின்றனர்.