பாரதி புத்தகாலயத்தின் முன்னாள் வேலூர் மாவட்ட பொறுப்பாளர் மூத்த தோழர் ஆர்.சாவித்திரி நினைவாக “புத்தகங்களோடு புத்தாண்டை வரவேற்போம்” என்னும் தலைப்பில் புத்தக கண்காட்சி நேதாஜி தலைமையில் நடை பெற்றது. காட்பாடி வாசகர் வட்டம், பாரதி புத்தகாலயம், தமுஎகச சார்பில் காட்பாடி எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்காட்சியை வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமார் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். வாலிபர் சங்கம் காட்பாடி செயலாளர் நவீன், து. ெஜகன், கே.சங்கர், பாரதி புத்தகாலய பொறுப்பாளர் எஸ்.சுரேந்திரன், வாசகர் வட்ட உறுப்பினர்கள் எம்.எஸ்.கெஜராஜ், கு.தருமன், என்.பிச்சுமணி, பெ.திலீபன், துர்கா, சுடரொளியன், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.