districts

img

புதுச்சேரியில் அதிகாரத்தை மீறும் பாஜக

புதுச்சேரி, மே 15- புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில், 6 இடங்க ளில் வெற்றி பெற்ற பாஜக. பின்னர்  மத்திய  அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி செயற்கையாக 3 நியமன உறுப்பினர்களை நியமித்து கொண்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை (மே 14) தன்னிச்சையாக தலைமைச் செயலகத்தில் உள்ள கருத்த ரங்க அறையில் தலைமைச் செயலாளர் அஸ்வின்குமார், அரசு செயலர்கள் அருண், வல்லவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் பாஜக சட்டமன்ற குழு தலைவராக உள்ள நமச்சிவாயம் தலைமையில் கொரோனா தடுப்பு பணிக்கான ஆலோசனைக் கூட்டம் என்று கூறி கூட்டம் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் கூட்டணி கட்சியான என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.  தேவையில்லாமல் எங்கள் கூட்டணிக்குள் எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று தெரிவித்தனர். இந்நிலையில் கூட்டணிக் கட்சியின்  சட்டமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படா மல் தற்போது அரசு தலைமைச் செயல கத்தில் இக்கூட்டம் நடத்திருப்பது புதுச்சேரி அரசின் அதிகாரத்தை கைப்பற்றும் நடவ டிக்கையாக பார்க்கப்படுகிறது.

முதல்வர் ரங்கசாமி சிகிச்சை

 கொரோனா பெருந்தொற்றால்  பாதிக்கப் பட்டு முதல்வர் ரங்கசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் என். ஆர். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்காமல் கூட்டம் நடத்தியிருப்பது, புதுச்சேரி அரசியல் வட்டா ரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பாஜகவினர் தவறான வழியில் அதிகாரத்தை கைப்பற்றும் நடவடிக்கை என பலரும் கூறுகின்றனர்.

 

;