districts

img

இரும்பு திருடிய பாஜக கவுன்சிலர்

கடலூர்,ஆக.10 -

      திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில்இரும்பு பொருட்கள் மாய மானது தொடர்பாக பாஜக கவுன்சிலர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

     கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பான்பரி மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராள மான காய்கறி மற்றும் மளிகை கடைகள் உள்ளன. இது மிகவும் பழமையான மார்க்கெட் என்பதால், இங்கு உள்ள கடை களை இடித்து விட்டு புதிதாக கடைகள் கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு எடுக்கப் பட்டது.

     அதன்பேரில் தற்போது அங்குள்ள கடைகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இடிக்கப்பட்ட கடைகளில் இருந்து இரும்பு பொருட்கள் ஓரிடத்தில் குவித்து வைத்தி ருந்தனர்.  

     இந்நிலையில் அங்கிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு பொருட்கள் திடீரென மாயமானது. இது குறித்து கடலூர் செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ராம்குமார் என்பவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கடலூர் மாநகராட்சி 28 வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் சக்திவேல் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் பான்பரி மார்க்கெட்டில் இரும்பு பொருட்கள் மாயமானது குறித்து பாஜக கவுன்சிலர் மீது  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.