districts

பாஜகவுடன் சேர்ந்துள்ள பாமக வீழ்த்தப்பட வேண்டும்

விழுப்புரம், ஜூலை 5- தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக  செயல்படும் பா.ஜனதா வுடன் கூட்டணி சேர்ந்துள்ள பா.ம.க.வீழ்த்தப்பட வேண்டும் என செல்வப் பெருந்தகை எம்எல்ஏ பேசினார். விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம்  ஆரியூர், வெங்கந்தூர், வாழப்பட்டு, சித்தாமூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இக்கூட்டங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை  கலந்துகொண்டு, வேட்பா ளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்துக்கு பொது மக்க ளிடம் வாக்குகள் சேகரித் தார். அப்போது அவர் பேசுகையில். திமுக தேர்தலில் கொடுத்த வாக் குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத வாக்குறுதி களையும் நிறைவேற்றி யுள்ளது. தற்போது தி.மு.க. ஆட்சியில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை, அரசு பஸ்களில் கட்டணமில்லா பயணம் போன்ற பல்வேறு  திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு வருகிறது. பெருந் தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு  வந்துள்ளார்.இந்த  நல்லாட்சியை உறுதிப் படுத்தும்வகையில் உதய சூரியனுக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக செயல் படும் ஒன்றிய  பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்துள்ள பா.ம.க. வீழ்த்தப்பட வேண்டும். என் அவர் அப்போது வாக்காளர் கள் மத்தியில் பேசினார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு, விஷ்ணு பிரசாத் எம்.பி., தி.மு.க.  தெற்கு மாவட்ட பொறுப் பாளர் பொன் கௌதம சிகாமணி, காங்கிரஸ் குலாம்மொய்தீன்,  வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.பி.ரமேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.