திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கடந்த 1995 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பெண் யானை ஒன்றை தானமாக வழங்கினார். அந்த பெண் யானைக்கு ருக்கு என்று பெயரிடப்பட்டு திருவிழா காலங்களில் பங்கேற்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. உயிரிழந்த யானைக்கு மணிமண்டபம் கட்டும் பணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் துவக்கி வைத்தார்.