districts

பருவ மழைக்கு முன் தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டும் மாநகர மேயர் பிரியா உத்தரவு

சென்னை, மே 15- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில்  மழைநீர் வடிகால் அமைக்கும் பணி களை விரைந்து தொடங்கவும் தூர்வாறும் பணிகளையும் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு மேயர் ஆர்.பிரியா உத்தர விட்டுள்ளார். சென்னை மாநகரில் ரூ.3,708.74 கோடி மதிப்பில்  905.59 கி.மீ நீள மழைநீர் வடிகால்  அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ரூ.361.36 கோடி மதிப்பில்  127.56 கி.மீ நீள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. இப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற் றம் மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்பு களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாருதல், சிறு பழுதுகளை போக்கும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.184.65 கோடி  மதிப்பில் 40.79 கி.மீ நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும்,  கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.3220 கோடி மதிப்பில் 769 கி.மீ நீளத்திற்கு  நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி கள் குறித்தும், கோவளம் வடிநிலப் பகுதிகளில் மடிப்பாக்கம் மற்றும் ஆலந்தூரில் ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.150.47 கோடி மதிப்பில் 39 கி.மீ நீளத்திற்கு  நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி கள் குறித்தும், உலக வங்கி நிதி உதவியு டன் ரூ.119.93 கோடி மதிப்பில் 45 கி.மீ நீளத் திற்கு விடுப்பட்ட 114 இடங்களில் நடை பெற்று வரும் மழைநீல் வடிகால் பணிகள் குறித்தும், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.26.28 கோடி மதிப்பில் 9.80 கி.மீ நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடி கால் பணிகள் குறித்தும், மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.7.41 கோடி மதிப்பிட்டில் 2 கி.மீ நீளத்திற்கு புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் மேயர் ஆர்.பிரியா விரிவாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணை யாளர் ககன்தீப்சிங் பேடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;