districts

ஆயுதபூஜை: பேருந்து இயக்கும் இடம் மாற்றம்

சென்னை, செப். 21 - ஆயுத பூஜையையொட்டி சென்னை யிலிருந்து மக்கள் சொந்த ஊர்க ளுக்கு பயணம் மேற்கொள்ளுதல் கோயம்பேடு பேருந்து நிலை யத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த ஆண்டு  வழக்கமாக இயக்கப் படும் 2100 பேருந்துகளுடன் 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க செப்.30 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில் 3 இடங்களில் இருந்து  பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். அதன் விவரம் வருமாறு: தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம்: திண்டிவனம் மார்க்கமாக திரு வண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டி வனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வட லூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள். பூவிருந்தவல்லி பைபாஸ் (மா.போ.க. பூவிருந்தவல்லி பணிமனை அருகில்): வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையம்: மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும்  சிதம்பரம் வழி இசிஆர்), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப் பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர் கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக் கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் பெங்களூர், திரு வனந்தபுரம் மற்றும் குருவாயூர்) இந்த இடங்களுக்கு, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்து கள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும். இவ்வாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரி வித்துள்ளார்.

;