districts

img

கல்வி நிறுவனங்களுக்கு விருது

சென்னை, மார்ச் 29- சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறந்தவடிவமைப்பு, புதிய பாடத்திட்டம் ஆகியவற்றில் சிறப்பாக கவனம் செலுத்திய கல்வி நிறுவனங்களுக்கு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிசைன் திங்கிங் இம்பாக்ட் விருதுகள்’ விருதுகள் வழங்கப்பட்டன. எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிக்கு சுற்றுச்சூழலுக்கான விருது,  நொய்டா பொறியியல் தொழில்நுட்ப மையத்திற்கு எதிர்கால திறன் வடிவமைப்பு கட்டமைப்பு விருது, டிஎன் ஸ்டார்அப்பிற்கான எதிர்கால கொள்கை மற்றும் ஆளுகை வடிவமைப்பிற்கான விருது,  கொல்கத்தா இந்திய மேலாண்மை கல்வி மையத்திற்கு சமூக நலன் சார்ந்த பாடத்திட்ட வடிவமைப்புக்கான விருது வழங்கப்பட்டது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் டி ஜி சீதாராம், இன்டலெக்ட் நிர்வாக இயக்குநர் அருண் ஜெயின், தலைமை வடிவமைப்பு அதிகாரி டாக்டர் அன்பு ரத்தினவேல் ஆகியோர் இந்த விருதுகளை வழங்கினார்கள்.