திருவள்ளூர், நவ. 10- திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழி லாளர்கள் சங்கத்தின் 11 வது மாவட்ட மாநாடு சனிக்கிழமையன்று (நவ 9), கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் ஏ.கரி முல்லா தலைமை தாங்கினார். பகுதி பொருளாளர் எம்.ரவிச்சந்திரன் வர வேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ஜி.சங்கர்தாஸ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன் கொடியை ஏற்றி வைத்தார். ஆட்டோ சம்மேள னத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் எம்.சந்திரசேகரன் வேலை அறிக்கையை முன்மொழிந்தார். மாவட்ட பொருளாளர் எம்.தயாளன் வரவு செலவு கணக்கை முன்வைத்தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் கே. விஜயன், தையல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.நடேசன், ஆட்டோ சங்கத்தின் மாநில முன்னாள் நிர்வாகிகள் ஏ.எல்.மனோகரன், பழனி ஜெயகோபால் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிஐடியு மாவட்ட பொருளாளர் என்.நித்தியானந்தம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பரமசிவம் நன்றி கூறினார். மாவட்டக்குழுதேர்வு மாவட்ட தலைவராக ஏ.கரிமுல்லா, செய லாளராக எம்.சந்திரசேகரன், பொருளாள ராக எம்.தயாளன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் பைக்-டாக்ஸியை தடை செய்ய வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும், இஎஸ்ஐ போன்ற சமூக பாதுகாப்பை ஏற்படுத்தி தரவேண்டும், சொந்தமாக வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு குடி மனை பட்டா வழங்க வேண்டும், ஆட்டோக்க ளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.