சென்னை,டிச.2- பங்களாதேஷில் ஆசிய அளவிலான உலக குத்துச்சண்டை கவுன்சில் நடத்திய சர்வதேச தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் ப்ளை வெயிட் பிரிவில் பங்கேற்ற சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்த பி.ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இறுதிப் போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பங்களாதேஷைச் சேர்ந்த எம்டி.சபியுல் இஸ்லாம் என்பவரை 8 சுற்றுகளில் 79-71, 76-70, 76-70 என்ற புள்ளிகளின் அடிப்படையில் 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றார்.