கள்ளக்குறிச்சி, டிச.17- இளம்பெண், குழந்தையின் மீதான பாலியல் வன்கொடுமை செய்தவரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வலி யுறுத்தி கள்ளக்குறிச்சியில் மாதர்சங்கம் புகார் மனு அளித்துள்ளது. சங்கராபுரம் வட்டம், அரூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் அருண் பிரசாத் (வயது 23) பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளான். பல பெண்களை வாட்சப் வீடியோ மூலம் ஆடைகளை களைய செய்து ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டும் தொடர்ந்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான்.இதனை அடுத்து 12.11. 2023 ல் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் தந்தை, காமக்கொடூரன் அருண்பிரசாத்தின் மீது செல்போன் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது சங்கராபுரம் காவல்துறை 2.12.2023 வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட குற்றவாளி கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட குழு சார்பில் அருண் பிரசாத் பெண் குழந்தைகள், இளம்பெண்கள் என ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி தன் தேவைக்கு பயன்படுத்தியதும் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக அவரை கைது செய்து மேல் நடவடிக்கைக்கு உட்படுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் இ.அலமேலு, செயலாளர் ஏ.தேவி மற்றும் நிர்வாகிகள் என்.தனலட்சுமி, வி.சந்திரா, ஏ. சக்தி, லூயிசா மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.