districts

கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க ஒப்புதல்

சென்னை, ஆக. 10-

     கிளாம்பாக்கம் பேருந்து முனை யம் ரூ.400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு விரைவில் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது.  

    பேருந்து முனையத்தில் 99 விழுக் காடு பணிகள் நிறைவடைந்துள்ளன. கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து முனையம் என பெயரிடப் பட்டு ஜூன் மாதமே திறக்க திட்ட மிடப்பட்டிருந்தது. அடுத்த பணிக ளால் திறப்பு விழா தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. பேருந்து முனையம் திறக்கப் பட்டால் பயணிகளுக்கு எந்த விதமான அசவுகரியமும் ஏற்படக்கூடாது என்பதில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உறுதி யாக இருக்கிறது.

    மழைநீர் தேங்கும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடி கால் அமைக்கும் பணிகள் வேகமெத் தன. அதேபோல், போக்குவரத்து நெரி சலை தவிர்க்கும் வகையில் அய்யஞ் சேரி சாலை விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன.

    கிளாம்பாக்கம் பேருந்து முனையம்  திறக்கப்பட்டால், சென்னை நகருக்குள் இருந்து வெளியூர் செல்லும் மக்களுக்கு சிரமம் ஏற்படும் என தெரிகிறது. தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு இணைப்பு வசதியாக மாநகர பேருந்துகளே இருக்கின்றன. புறநகர் ரயில்களில் வரு பவர்கள் வண்டலூர் அல்லது ஊரப் பாக்கம் நிலையங்களில் இறங்கி பின்னர் நடந்தோ அல்லது ஆட்டோ விலோ கிளாம்பாக்கம் செல்ல வேண்டும்.

    இதனை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. சிஎம்டிஏ பங்களிப்புடன் ரயில்வே இணைந்து ரூ.20 கோடி மதிப் பீட்டில் புதிய ரயில் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலை யம் தொடங்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

    இதையடுத்து, சென்னை ரயில்வே கோட்டம் தரப்பில் இருந்து புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கான ஆய்வு  மற்றும் பூர்வாங்க பணிகள் தொடங்கி  இருக்கின்றன. இந்த பணிகள் முடிவு  பெற்றதும் கட்டுமான வேலைகளை தொடங்க டெண்டர் விடப்பட்டு ஓராண் டுக்குள் புதிய ரயில் நிலையத்தை பயன் பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    ஒருபுறம் இருக்க, கிளாம் பாக்கம் பேருந்து முனையம் மற்றும் ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்க நவீன ஸ்கை வாக் அமைக்கப்பட உள்ளது. ரயிலில் வரும்  பயணிகள் சாலையை கடந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. புற நகர் ரயில் நிலையத்தில் இருந்து சிரமம் இல்லாமல் பேருந்து முனை யம் செல்லலாம்.