சிஐடியு புதுச்சேரி மாநில தலைவர் பிரபுராஜ்,செயலாளர் சீனுவாசன்,இணை செயலாளர் மணிபாலன்,சிஐடியு தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலாளர் மதிவாணன்,ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் மற்றும் மினி வேன் ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் அந்தோணி தாஸ், சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமியை கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் சந்தித்து உண்மை நிலையை விளக்கினர். அப்போது எந்தவித போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாமல் 30 வாகனங்களுடன் மினி வேன் வாடகை நிலையம் செயல்பட அனுமதி வழங்கினார்.