districts

விபத்தில் இறந்த முதியவர் உடலைத் தர ரூ.1.3 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை

சிறுபான்மை மக்கள் நலக்குழு தலையீட்டால் சுமூக தீர்வு

தஞ்சாவூர், ஜூன் 27- அரியலூர் மாவட்டம் உடையார்  பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்  அன்சர் பாஷா (62). இவர்  ரேடியோ மெக்கானிக் வேலை  பார்த்து வந்துள்ளார். இந்நிலை யில் கடந்த 12 ஆம் தேதி ஞாயிற்  றுக்கிழமை உடையார்பாளை யம் பகுதியில் சாலையில் நடை பயிற்சிக்கு சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த மோட்டார்  சைக்கிள் திடீரென அவர் மீது மோதி யது.  இதில் சாலையில் தூக்கி  வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்  தார். உடனே அருகில் இருந்தவர்கள் மற்றும் அவருடைய உறவி னர்கள் அவரை மீட்டு அந்த  பகுதியில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக  கடந்த 13 ஆம் தேதி தஞ்சை வ.உ.சி  நகரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். கடந்த சில நாட்களாக அங்கு  சிகிச்சை பெற்று வந்த அவருக்கு,  அவருடைய உறவினர்கள் கிட்டத்தட்ட 2 லட்சத்து 70 ஆயிரம்  ரூபாய் வரை மருத்துவமனையில் செலவு செய்துள்ளனர்.

 இந்நிலையில் புதன்கிழமை  அவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரி ழந்தார். இதையடுத்து, மருத்துவ மனை நிர்வாகம் உயிரிழந்த அன்சர் பாஷாவின் மகன் ஹபீப் பாஷாவிடம், மேலும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்  ளது. பணம் கட்டினால்தான் உடலை தருவோம் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப் பட்டுள்ளது. ஏற்கனவே நிறைய பணம் கடன் வாங்கி செலவழித்து விட்டதால், தங்களால் ஏதும்  செய்ய இயலாத நிலையில் உள்ள தாக ஹபீப் பாஷா நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால் நிர்வா கம், பணத்தை கட்டினால்தான்  உடலை தருவோம் என விடாப்பிடி யாக கூறிவிட்டது.  இதனையடுத்து வியா ழக்கிழமை காலை தமிழ்நாடு  சிறுபான்மை மக்கள் நலக் குழு  மாவட்டத் தலைவர் பி.செந்  தில்குமார் தலைமையில், மாநக ரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர், மாநகரச் செயலாளர் கோஸ்கனி, துணைத் தலைவர் என்.குருசாமி, ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெய்னுலாப்தீன், டிஎன்டிஜே ஷாஜகான், ஐ.என்.டி.ஜேவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விபத்தில் உயிரிழந்த அன்ஷர் பாஷாவின் உறவினர்கள் தஞ்சை  -திருச்சி சாலையில் தனியார்  மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

அப்போது மருத்துவ மனை நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி னர். இதைத் தொடர்ந்து நடை பெற்ற பேச்சு வார்த்தையில்  உடன்பாடு ஏற்பட்டது. பின்னர், இறந்து போன அன்ஷர் பாஷா  உடல் உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது.  இக்கட்டான நேரத்தில் தங்க ளுக்கு உதவிய சிறுபான்மை மக்கள்  நலக்குழு உள்ளிட்ட அமைப்பு களுக்கு, ஹபீப் பாஷா மற்றும்  அவரது உறவினர்கள் நன்றி தெரி வித்தனர். பின்னர் அன்வர் பாஷா உடல், சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

;